battinews

    Home battinews
    battinews தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

    மட்டக்களப்பில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வாகன விபத்து-

    மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன்னர் (16-02-2024) முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் விபத்தில் காயமடைந்த காத்தான்குடியை சேர்ந்த நால்வர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லுமாறு அவசர கோரிக்கையொன்றும் விடுக்கப்பட்டுள்ளது

    கடலில் செல்பி எடுத்த மாணவர்களில் 2 மாணவர்களை அள்ளி சென்ற அலை

    மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். மாளிகைக்காடு- சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்களான 13-15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது மாலை 04.20 மணி அளவில் அதில் இருவரை கடலலை உள்ளிழுத்து […]

    தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து..!{படங்கள்}

    ஆலங்குடாவை சேர்ந்த முச்சக்கர வண்டி கல்பிட்டி வீதி தலுவ சின்ன பாலத்துக்கு அருகில் கட்டுபாட்டையிலந்த வீதி விட்டு விலகி தலைகீழாக தடம்புரண்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்பட்டுள்ளனர்.

    சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக பங்கேற்கும் ஓட்டமாவடி மாணவி!

    ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் உள்ள நியூ டலண்ட் சிறுவர் கழகத்தின் தலைவி முகம்மது இஸ்மாயில ரணா சுக்ரா, பூட்டான் நாட்டில் நடைபெற இருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கலந்துகொள்ளவுள்ளார். இவர் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதைகூறல் போட்டியில் தேசிய விருது பெற்றதன் அடிப்படையில், சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. முகம்மது இஸ்மாயில் ரணா சுக்ரா, ஓட்டமாவடி 01 208பி/2 கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்கும் நியூ டலண்ட் சிறுவர் கழகத்தின் […]

    தமிழர் பகுதியில் வீட்டிலிருந்து கடைக்கு சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு..!

    கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டதுடன் சடலத்தை அடையாளம் காண்பதற்காக கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. கடந்த திங்கட்கிழமை(12) மீட்கப்பட்ட இச்சடலம், மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கதிரவேல் பத்மராஜ் (வயது 59) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் இருந்து […]