யாழ் செய்திகள்

    Home யாழ் செய்திகள்
    யாழ் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

    4 ஆம் திகதி மனித சங்கிலி போராட்டமாம்!! யாழில் திடீரென ஒன்றுகூடிய தமிழ் தேசியக் கட்சிகள் தீர்மானம்

    தமிழ் நீதிபதிகளுக்கு விடுக்கப்படும் உயிர் அச்சுறுத்தல், அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 4ஆம் திகதி பெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (செப்ரெம்பர் 29) யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய 7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகப் பதவிகளைத் துறந்து வெளிநாடு பயணமாகியுள்ளார். முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. குருந்தூர்மலை விகாரை தொடர்பான நீதிமன்றக் கட்டளையை மாற்றும்படி சட்டமா அதிபரால் நேரில் அழைக்கப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன என்று ரி.சரவணராஜா தனது பதவி விலகல் காரணங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நாட்டின் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பாகச் சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றது. இந்தநிலையில் தமிழ் நீதிபதிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் […]

    முன்னணியின் மற்றுமொரு திருகுதாளம் அம்பலம்! நடவடிக்கை எடுக்குமா கட்சித் தலைமை

    தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பில் ஊடகங்களின் போலியான ஒலிவாங்கிகள் வைக்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது பல ஊடகங்கள் சமூகமளிக்காத நிலையில் ஊடகங்களினுடைய போலியான ஊடக ஒலிவாங்கியை வைத்து ஊடக சந்திப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் போலியான ஊடக ஒலிவாங்கிகளை குறித்த கட்சியினுடைய தீவிர செயற்பாட்டாளர் ஒருவரே வைத்து வீடியோவை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இலங்கையினுடைய பிரபலமான ஊடகங்களான DAN TV, CAPITAL TV, HIRU NEWS, SURIYAN FM ஆகிய ஊடகங்களின் ஒலிவாங்கிகள் போன்று போலியான ஒலிவாங்கிகளை அவர்களே தயார் செய்து குறித்த ஊடக சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். குறித்த ஊடக சந்திப்பில் அக்கட்சியினுடைய ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான நடராஜா காண்டீபன் கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்தார். குறித்த ஊடகசந்திப்பில் வைக்கப்பட்டிருந்த ஊடக ஒலிவாங்கிகள் பார்க்கும்போதே போலியானவை என […]

    யாழில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

    யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம் (27.09.2023) புதன்கிழமை இரவு சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை கடற்படையினர் சோதனையிட முயன்ற போது , படகில் இருந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர். தப்பி சென்றவர்களில் ஒருவரை கடற்படையினர் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபரை படகின் அருகில் அழைத்து சென்று படகினை சோதனையிட்ட போது படகில் மூன்று உரைப்பைகளில் கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட கஞ்சாவின் தொகை சுமார் 125 கிலோ கிராம், எனவும் தம்மால் கைது செய்யப்பட்ட நபரையும் மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். மேலும், யாழ். காரைநகர் – மருதபுரம் பகுதியில் இரண்டரை கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சந்நேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த […]

    யாழ் போதனா மருத்துவமனையில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

    யாழ் போதனா மருத்தவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை பிறப்பித்தது. காய்ச்சல் காரணமாக யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடதுகையின் மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்டது. சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் கடமையில் இருந்தவர்களின் அலட்சியமும், தவறுமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஒருவர் ஊடாக உடற் கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் கோரியமைக்கு அமைய நீதிமன்றம் கட்டளையிட்டது. பெயர் குறிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட […]

    யாழில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி! குழப்பும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸார்!

    தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் , நாட்டு பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகன் பொதுச்சுடர் ஏற்றினார். அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் , நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன் , யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06க்கும் மேற்பட்ட ஊர்தி பவனிகள் வந்திருந்தன.நினைவு சுடர் ஏற்றுவதற்கு சுமார் அரை மணி […]