Home மலைநாட்டு செய்திகள் 16 வயதான இளம் பூசகரின் விபரீத முடிவு

16 வயதான இளம் பூசகரின் விபரீத முடிவு

58

16 வயதான இளம் பூசகர், தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில் இந்துக்கோவிலில் பூசகருக்கு உதவியாளராக செயற்பட்ட இளம் பூசகரே இவ்வாறு மரணித்துள்ளார்.

கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மடுவத்திலேயே அவரது சடலம் கிடக்கின்றது என்று நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒஸ்போன் தோட்டத்தின் கீழ் பிரிவைச் சேர்ந்த சுந்தரமுல்லன் ஜனநாதன் என்ற இளைஞனே இவ்வாறு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

பிரதான பூசகர் கோவிலில் இல்லாத சமயத்திலேயே அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ள நோட்டன்பிரிஜ் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்​ தெரிவித்தனர்.

Previous articleமுல்லைத்தீவில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் விபரீத முடிவு
Next articleதொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி