Home Jaffna News யாழ்.போதனா வைத்தியசாலையில் பொதுமகன் மீது பாதுகாப்பு ஊழியர்கள் தாக்குதல்! 3 பேர் கைது

யாழ்.போதனா வைத்தியசாலையில் பொதுமகன் மீது பாதுகாப்பு ஊழியர்கள் தாக்குதல்! 3 பேர் கைது

44

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அந்நபர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தரப்பு தெரிவிக்கின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலை நுழைவாயிலுக்கு அருகில் நபர் ஒருவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபரையும், தாக்குதல் மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதிருகோணமலையில் இளைஞனின் விபரீத முடிவு
Next articleபொதுமகன் மீது தாக்குதல் நடத்தியமை!! இருவரும் பணி நீக்கம்