Home Jaffna News யாழில் வீட்டுக்குள புகுந்து வாள் வெட்டு குழு வெறியாட்டம்..!

யாழில் வீட்டுக்குள புகுந்து வாள் வெட்டு குழு வெறியாட்டம்..!

35

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது.

44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (22) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடே
வன்முறைக்கான காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமணல் அகழ்வுக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய தலைமன்னார் மக்கள்..!{படங்கள்}
Next articleதமிழக மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்..!{படங்கள்}