Home battinews கடலில் செல்பி எடுத்த மாணவர்களில் 2 மாணவர்களை அள்ளி சென்ற அலை

கடலில் செல்பி எடுத்த மாணவர்களில் 2 மாணவர்களை அள்ளி சென்ற அலை

47

மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

மாளிகைக்காடு- சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்களான 13-15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது மாலை 04.20 மணி அளவில் அதில் இருவரை கடலலை உள்ளிழுத்து சென்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவர்கள் கடலில் இழுத்து செல்லப்பட்டதையடுத்து மீனவர்களும், பொதுமக்களும் இயந்திர படகுகளை கொண்டு தேடியும் இன்று இரவு 9.00 மணி வரை எந்த பலனும் கிடைக்கவில்லை.

இருள் காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய ஆறு மாணவர்களும் அவர்கள் பயணித்த துவிச்சக்கர வண்டிகளும் நிந்தவூர் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!{படங்கள்}
Next articleஆற்றில் விழுந்த யுவதியை அள்ளி எடுத்த ஊர் மக்கள்